Celebrating Bharathi Raja

International Institute of Film and Culture is proud to bring to you the second event in the Celebrating Masters of Cinema – Celebrating Bharathi Raja. This event is being organised in association with Vels University.The event will have curated screenings of Director Bharathi Raja’s films along with lively discussions, experience sharing, and performances. Do come and be a part of this joyful celebration of cinema and its Masters..

என் இனிய தமிழ் மக்களே,
உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா பேசுகிறேன் என்று அன்புடனும் அக்கறையுடனும் நம்மை அழைத்து அழகான திரைப்படங்கள் தந்தவர் இயக்குநர் இமயம் பத்மஸ்ரீ பாரதி ராஜா அவர்கள்.
உறவுகளையும் உணர்வுகளையும் உன்னதப்படுத்தும் திரைப்படங்களை கவிதைகளாகத் தந்தவரைக் கொண்டாடுவதில் பெருமை கொள்கிறது பன்னாட்டுத் திரைப் பண்பாடு ஆய்வகம் – International Institute of Film and Culture. வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடைபெற இருக்கிறது இந்தத் திரை விழா.

இந்த நிகழ்வில்:

  • திரையரங்கம் என்ற அமர்வில் அவரது படங்களின் திரையிடல்; 
  • பகிர்வரங்கம் என்ற அமர்வில் அந்த திரைப்படங்களில் பங்கேற்ற நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்களின் அனுபவப் பகிர்வு;
  • ஆய்வரங்கம் என்ற அமர்வில் ஆய்வாளர்கள் , பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஆய்வுக் கருத்துகளின் பகிர்வும் விவாதங்களும் இடம் பெறும்.

இந்த நிகழ்வு தமிழ்த்திரையை மடை மாற்றிய மாபெரும் கலைஞரான பாரதி ராஜாவையும்,  வயது, காலம், தலைமுறைகள் தாண்டி இன்னும் மிளிர்ந்து கொண்டிருக்கும் அவரது திரைக்காவியங்களையும் கொண்டாடுவதற்காக உள்ளார்ந்த அன்போடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.
(தேதிகளில் ஏதேனும் மாற்றம் இருந்தால் வலை தளத்திலும் சமூக ஊடகங்களிலும் தெரிவிக்கிறோம்).

பாரதி ராஜா எனும் மாபெரும் கலைஞர்- ஆய்வரங்கம்
பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்கள் இதில் பங்கேற்கலாம்.இயக்குனர் பாரதி ராஜாவின் திரைப்படங்களில் தங்களுக்கு பிடித்த கோணத்திலிருந்தும் தங்களது தனிப்பட்ட பார்வையிலிருந்தும் ஆய்வு செய்து தங்களது ஆய்வுக் கட்டுரையை தயார் செய்யலாம்.

முதல் கட்டமாக 2025 ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதிக்குள் ஆய்வு கட்டுரைக்கான தலைப்பையும் 50 வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரை சுருக்கத்தையும் குறிப்பிடப் பட்ட ஈமெயிலுக்கு அனுப்ப வேண்டும்.
தேர்ந்தெடுக்கபட்ட abstract கள் 2025 மே மாதம் 2 ஆம் தேதியன்று தெரிவிக்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்  2025 ஜூன் மாதம் 1 ஆம் தேதிக்குள்  1500 வார்த்தைகளுக்கு மிகாமல் ஆய்வுக் கட்டுரையை தமிழில் எழுதி அனுப்ப வேண்டும்.
(குறிப்பிடப்பட்ட காலவரையறைக்குள் அனுப்புபவர்களுக்கு பதிவுக் கட்டணம் செலுத்த தேவையில்லை.காலவரையறை நீட்டிப்பு கேட்பவர்கள் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்).

நிகழ்வின் போது இந்தக் கட்டுரையை 10 – 15 நிமிடங்களில் அரங்கத்தில் பகிர்ந்து கொள்ள  தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.
திரைப்படங்களை நேசிப்பவர்கள்,
திரைப்படங்களுக்கு புதிய பாதை வகுத்த ஆளுமைகள் மீது அபிமானம் கொண்டவர்கள் அவசியம் பங்கெடுத்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

Contact Details:

iifcinstituteofficial@gmail.com

+91 9363285306